காலநிலை மாற்றமும் இலங்கையும்

காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய அளவில் மிக முக்கியமான சிக்கலாக உருவாகியுள்ளது. சிறிய தீவுநாடான இலங்கை அதன் புவி அமைவிடம் மற்றும் அபிவிருத்தி நிலை காரணமாக காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தீவிரமாக அனுபவிக்கிறது. வெப்பநிலை உயர்வுஇ மழை முறைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையின் முக்கிய பொருளாதாரத் துறைகள் விவசாயம்இ மீன்பிடி தொழில் மற்றும் சுற்றுலா இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றன. நெல், தேயிலை, ரப்பர் போன்ற பயிர்கள், மழை முறைமைகள் மாற்றம் மற்றும் நீர்ப்பாசன சிக்கலால் பாதிக்கப்படுகின்றன. கடல் மட்ட உயர்வால் கடற்கரை பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் அதனுடன் மீன்பிடி மற்றும் சுற்றுலா துறைகளுக்கும் ஆபத்தாக உள்ளது.

இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாகவும் அயன மண்டலத்தில் அமைந்த ஒரு தீவாகவும் இருப்பதால் காலநிலை மாற்றத்தால் மிக அதிக அளவில் பாதிக்கப்படும் ஆபத்திற்குள்ள நாடுகளில் ஒன்றாகும். கடுமையான மழை, வெள்ளம், நிலச்சரிவுகள் நீண்ட உலர் காலநிலை போன்றவை இப்போது சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.

இத்தகைய சூழலில்இ நிலையான வளர்ச்சியும்இ சூழலுக்கு ஏற்ற மாற்றங்களையும் கொண்ட செயல்திட்டங்களை அரசு மற்றும் சமூகம் இரண்டும் விரைவில் செயல்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கியோட்டோ நெறிமுறையின் கீழ் பசுமை வீட்டு வாயுக்கள் குறைப்பதற்கான முயற்சியில் இலங்கையும் பங்கேற்றுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும் முக்கிய காரணங்கள்:
பசுமை வீட்டு வாயுக்கள் :
எரிபொருட்களின் அதிக பயன்பாடு (எண்ணெய்இ நிலக்கரி) காரணமாக காபன்டைஆக்சைடு அளவு அதிகரித்து புவி வெப்பமடைவதில் தாக்கம் ஏற்படுகிறது.

காடு அழிப்பு:
அதிகமான காடுகள் விவசாயம் மற்றும் குடியிருப்புகளுக்காக அழிக்கப்படுவதால் இயற்கை கார்பன் சுழற்சி பாதிக்கப்படுகிறது.

கடல் மட்ட உயர்வு மற்றும் கரை தேய்வு:
இது கடற்கரை வாழும் சமூகங்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது.

மாறுபடும் பருவமழை முறைமை:
இயற்கையான நீர்வளங்களை பாதிப்பதால்இ விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இலங்கையின் நடவடிக்கைகள்:
நிறுவன ரீதியான முயற்சிகள்:
2002: மொறட்டுவை மற்றும் பேராதெனியாவில் காலநிலை தொடர்பான ஆராய்ச்சி நிலையங்கள் நிறுவப்பட்டன.

சுற்றுச்சூழல் சட்டங்கள் (1980, 1988, 2000): நீர்வள முகாமைத்துவம் தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

செயற்றிட்ட ரீதியான முயற்சிகள்:
2010: “மஹிந்த சிந்தனை ஹரித் லங்கா” திட்டத்தின் கீழ் “ரன்தொர தேசிய நிகழ்ச்சி” மூலம் உட்கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசன மேம்பாடுகள்.

2012: “எப்போதும் எல்லோருக்கும் நீர்” வேலைத்திட்டம்.

நாட்டளவில் சுமார் 50 சுற்றுச்சூழல் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; 30 நிறுவனங்கள் செயற்படுகின்றன.

புதிய நீர்ப்பாசன திட்டங்கள்:
மொறகஹகந்த, களுக, வெஹெர்கல, மகஓய, கெக்கிரிஓபொட, தெதுறுஓய ஆகிய இடங்களில் பாரிய திட்டங்கள் செயல்படுகின்றன.

விவசாய புலனாய்வு:
வறட்சி, உவர்த்தன்மை, நோய் எதிர்ப்பு உடைய நவீன பயிர்கள் அறிமுகம்.

நீர் பயன்பாட்டை அதிகரிக்க புதிய பயிர்செய்கை முறைகள்:

ஈரஃஉலர் பயிர்செய்கை

செறிவூட்டப்பட்ட மண் பயிர்செய்கை

பாராசூட் முறை பயிர்செய்கை

ஆராய்ச்சி நிலையங்கள்:
6 தேசிய ஆராய்ச்சி நிலையங்கள்
→ வறட்சி மற்றும் பீடைகளுக்கு உகந்த பயிர்கள் உருவாக்கம்.

சமூக பங்களிப்பு:
இலங்கையில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட அரசு மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன:

உள்ளூர் சமூகங்களுக்கு விழிப்புணர்வு.

அரசில் கொள்கை வடிவமைப்புக்குத் துணை.

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவிகள்.

சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பரப்புதல்.

இலங்கை எனும் அழகிய தீவுநாட்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதும்இ எதிர்கால சந்ததிகளுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நாம் இன்று எடுக்கும் நடவடிக்கைகளேஇ நாளைய நிலையான வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும்.

Share this message on your Social Network