By,
N.Roogesh
Undergraduate, Eastern University, Sri Lanka
Climate Reporter
கண்டல் தாவரங்கள் கரையோரப்பகுதிகளில் குறிப்பாக கழிமுகங்கள் மற்றும் கடநீரேரிகளில் காணப்படும் வித்துங்களை உருவாக்கக் கூடிய பூக்கும் தாவரங்களகும் இவை சேற்று நிலங்களில் நிலையாக நிற்பதற்கும், உவர்தன்மை மற்றும் அதிக வெப்பத்தை தாங்கக் கூடியதாகவும் இசைவாக்கம் அடைத்துள்ளன. சீவச முளைத்தல் எனும் தாவரத்தில் இருக்கும் போதே முளைக்கக் கூடிய வித்துக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது
இலங்கையில் 12000 ஹெக்டயர் பரப்பளவில் பரந்துள்ள இவை குறிப்பாக புத்தளம், மட்டக்களப்பு, தொண்டமாறு, நந்திக்கடல், நீர்கொழும்பு, சிலாபம், பொத்துவில், கழுத்துறை, மாத்தறை, காலி போன்ற இடங்களில் பரவலாகக் காணப்படுகிறது. இலங்கையில் 21 கண்டல் தாவர இனங்களும் 34 கண்டல் சூழல் சார்ந்த தாவரங்களும் காணப்படுகின்றன. கிண்ணை, கண்ணண போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
கண்டல் தாவரங்கள் “blue carbon” நீலக் காபன் என அழைக்கப்படுவதுடன் அவை மழைக்காடுகளை விட 3 தொடக்கம் 5 மடங்கு அதிகமாக காபளை சேமிக்கின்றன இதன் மூலம் சூழலுக்கு சேரும் பிரதான பச்சைவீட்டு வாயுவான காபனீரோட்சைட்டின் அளவு பெருமளவு குறைக்கப்படுகிறது. இவை இயற்கையான தாங்கு பிரதேசங்களாக தொழிற்படுவதுடன் கரையோர அரிப்பை திடுப்பதிலும் பெரும் பங்கு வலிக்கிறது. இவை மீன்கள், இறால். நண்டுகள், குடிபெயர் பறவைகள். முலையூட்டிகள் பலவற்றுக்கு வாழிடமாக அமைவதுடன் குறிப்பாக அவை இனம்பெருகலுக்கான பாதுகாப்பான சூழலை வழங்குகின்றன. இவற்றின் வேர்கள் வளமான வண்டல் மண்ணை தடுத்து அவை கடலில் சேரும் அளவைக் குறைக்கின்றன. அத்துடன் இவை உணவு, சுதேச மருத்துவம் விறகுத் தேவையையும் பூர்த்தி செய்கின்றன.
தற்காலத்தில் போதியளவு விழிப்புணர்வின்றி காடழிப்பு, முறையுற்ற உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்பாடுகள், நில அபகரிப்புக்கள், நகரமயமாக்கல் போன்றவற்றால் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன எனவே அவற்றின் முக்கியத்துவம் அறிந்து பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமையாகும்.
Resources
Srilanka’s mangroves www.coastal.gov.lk
Srilanka map from lankamangrovemuseum.lk
Pictures- Mangroves in Sathurukondan, Batticaloa, Sri Lanka

கிண்ணை Sonneratia sp

கண்டற் சூழல் சார்ந்த பறவைகள்

கண்டற் தாவர மூச்சு வேர்கள்