
By .நகுலேஸ்வரன் சுரேந்தினி
இலங்கை என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு அழகான தீவுநாடு. இது இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இலங்கை ஒரு சிறிய தீவுநாடு ஆக இருந்தாலும், உலகளாவிய காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகிறது. 2025ஆம் ஆண்டில் இந்த மாற்றங்கள் மேலும் தெளிவாக காணப்படுகின்றன. இக்கட்டுரையில், 2025ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம் ஆனால்
காலநிலை மாற்றத்தின் விளைவுகள்:
- வெப்பநிலை உயர்வு:
கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையில் வெப்ப நிலையானது உயர்ந்து கொண்டிருக்கிறது. 2025ஆம் ஆண்டில், பல இடங்களில் சாதாரண வெப்பத்துடன் ஒப்பிடும்போது 1°C வரை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. - மழை முறை மாற்றம்:
ஒரு காலத்தில் நிலையான முறையில் இருக்கும் பருவமழைகள் தற்போது கணிக்க முடியாத வகையில் மாறியுள்ளன. சில பிரதேசங்களில் கடுமையான வெள்ளம், மற்ற பகுதிகளில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. - பசுமை நிலத்தின் சீரழிவு:
அதிக வெப்பம் மற்றும் மழையின் மாறுபாடு காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயிர்களின் உற்பத்தி குறைவடைந்துள்ளது. - கரையோர ஈர மண்டலங்கள் பாதிப்பு:
கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையின் கரையோர பகுதிகளில் நிலச்சரிவு, கடல்சார் நிலப்பரப்புகள் மாயமாவதற்கான அபாயங்கள் ஏற்பட்டுள்ளன.
மரங்கள் நடுவது, பசுமை காப்பதற்கான திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
புதுப்பிக்கத்தக்க சக்திகளைப் பயன்படுத்தும் முயற்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
2025ஆம் ஆண்டில் இலங்கை எதிர்கொள்ளும் காலநிலை மாற்றம் கவலைக்கிடமானதாக உள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்கும் எதிர்கொள்ளுவதற்கும் அரசு, மக்கள், மற்றும் உலக நாடுகள் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்வது அவசியமாகிறது. எதிர்கால தலைமுறைகளுக்காக பசுமையான உலகத்தை உருவாக்க நாம் இன்று முதல் செயல்பட வேண்டும் என நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம்