
(அ . அச்சுதன்)
மூதூர் நகர, நகரத்தை அண்டிய குப்பைகள், கழிவுப் பொருட்களை கட்டைபறிச்சான் பாலத்தை அண்டிய வீதிக்கு அருகில் கொட்டப்படுகின்றன.
இந்த இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரதேச சபையினால் பயன் படுத்தப்பட்ட குப்பைமேடு பல முறைப்பாடுகளின் பின்னர் அகற்றப்பட்டதுடன், சுற்று வேலியும் அமைக்கப்பட்டது.
ஆயினும் தற்போது மீண்டும் அப் பகுதியில் குப்பைகள், கழிவுப் பொருட்கள் கொட்டப்படுகின்றன, இதனால் அப்பகுதி ஒரு நரகக் குழியாக மாறிவிட்டது. நாள் ஒன்றுக்கு சுமார் 5000 இற்கும் அதிகமானோர் இவ் வீதியால் பயணம் செய்கின்றனர். மூதூரின் கிழக்கு கிராமங்கள் அனைத்துக்கும் இதுவே நுழைவாயில்.
காலையில் அலுவலகங்களுக்கு வரும் உத்தியோகத்தர்களும், வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளும், இன்னும் தமது தேவைகளை நிறைவேற்ற வரும் பொது மக்களும் இப் பாதையால் செல்லும் போது மிகுந்த அருவருப்புடனும் வெறுப்புடனுமே வருகின்றனர். பின்னர் மீண்டும் வீடு செல்லும் போதும் இதேவேதனை அவல நிலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளே இவ் விடயத்தில் சற்று சிந்தியுங்கள்
