மல்வத்து ஓயா ஆற்றின் குறுக்குவெட்டு பகுதியில் மண்ணரிப்பும் சூழல் பாதிப்பும்

by – Samurdeen Nawfar

மன்னார் மாவட்டத்தில் கடலோடு கலக்கும் மல்வத்து ஓயா ஆற்றின் குறுக்குவெட்டு பகுதியில், ஆற்று நீரோட்டத்தினால் ஏற்படும் மண்ணரிப்பு மற்றும் சூழல் பாதிப்புகள் மீது எமது கவனம் அதிகம் தேவைப்படுகின்றது.
இந்த இயற்கை மாற்றங்கள் பல வகையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மண்ணரிப்பு: இயற்கையின் அழிவுக்கு வழிவகுக்கும் தூண்டுதல் ஆகும்.
ஆற்றின் நீரோட்டம் சக்திவாய்ந்ததாக இருக்கும்போது, அது மண், மணல், குப்பைத் தூள் போன்றவற்றை தன்னுடன் எடுத்துச் செல்லும். இதனால் ஆற்றின் வழியில் மற்றும் அதன் படுகையில் மண் அகற்றப்படுகிறது. இந்த மண்ணரிப்பு நிலத்தின் இயல்பையும் நிலைத்தன்மையையும் பெரிதும் பாதிக்கிறது.

சூழல் பாதிப்பு: மனித செயற்பாடுகள் காரணமாக தீவிரமாகிறது அத்தோடு
ஆற்றின் நீர்நிலை மற்றும் ஓட்டம் தொடர்ந்து மாறுவதால் தூய்மையற்ற நீர் அதன் வழியாக பாய்கிறது.
குறிப்பாக, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், வேளாண்மை பாவனையிலிருந்து வரும் வேதியியல் கழிவுகளும் இதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் காரணமாக நீர் மாசடையும், உயிரினங்களின் வாழ்விடங்களும் பாதிக்கப்படுகின்றன.

வளமுள்ள விவசாய நிலங்களுக்கு ஆபத்து
மண்ணரிப்பு ஆற்றுப் படுகைகளில் உள்ள வளமிக்க வண்டல் மண்ணை அழிக்கக்கூடும். இது பசுமை விவசாய நிலங்களை உருவாக்கும் வாய்ப்புகளை குறைக்கும்.

தாவர வளர்ச்சிக்கு எதிரியாக மாறும் மண்ணரிப்பானது நேரடியாக தாவர வளர்ச்சியிலும் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு: மேல்மண் அகற்றப்படுவதால், தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைந்து, அவற்றின் வளர்ச்சி தடையுறுகிறது.

வேர் அமைப்பு பாதிக்கப்படல்: வேர் அமைப்புகள் மண்ணரிப்பால் பாதிக்கப்படுகின்றன.

நீர்ப்பிடிப்பு திறன் குறைவடைதல்: மண்ணின் நீர்தாங்கும் திறன் குறைய, தாவரங்களுக்கு தேவையான நீர் கிடைக்காமல் போய், அவை வாடுகின்றன.

ஆகவே, மல்வத்து ஓயா போன்ற முக்கியமான ஆற்றின் நிலைத்தன்மையை பாதுகாக்கும் முயற்சிகள் அவசியம் தேவையானதொன்றாகும்.

Share this message on your Social Network