
By – சண்முகநாதன் யுவராசா
கிழக்கு மாகாணத்தில் கின்னியா தொடக்கம் வாகரை வரையான கடற்கரைபகுதியிலே இல்மனைற் போன்ற மிகவும் விலையுயர்ந்த கனியவளம் பெரிதும் காணப்படுகின்றது ஆனால் இந்த பகுதியில் பாரியதோர் கடலரிப்பு ஏற்படும் அபாயம் தோன்றியுளளது.
இதற்கு மனிதனது ஒரு சில செயற்பாடுகளும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது சட்டவிரோத மண் அகழ்வு [மகாவலி கங்கையின் கரையோர பகுதி] மீன், நன்டு ,இறால் போன்றவற்றின் இனப்பெருக்கத்திற்கு பெரிதும் பங்களிப்பு செய்யும் கண்டல் தாவரங்கள் அழிக்கபடுவதும் ஒரு காரணமாக அமைகின்றது.
இந்தப் பகுதியில் கரையோர மீன் வளர்ப்பு, கரையோர கரைவலை மீன்பிடி ௭ன்பன இடம் பெற்றாலும் சட்டவிரோத சுருக்கு வலை பாவனையும் நடந்தது கொண்டுதான் இருக்கின்றது.
இந்த கரையோரங்களில் ஏற்படும் மண்ணரிப்பு காரணமாக கடற்கரையில் கூடுதலான பகுதியை கடல் உள்வாங்குகின்றது இந்தப் பகுதியில் வெப்பம் அதிகரித்து வறட்சியான நிலமை தோன்றியுள்ளது.
மீன்பிடியை வாழ்வாதரமாகக் கொண்ட இந்தப் பகுதி பெரிதும் பதிப்படையும் நிலமை தோன்றியுள்ளது கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது

