By, Mohamed Althaf
நிலச்சரிவு என்பது ஒரு புவியியல் நிகழ்வு ஆகும். இது இயற்கை மற்றும் மானிட நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாக காணப்படுகின்றது. உயர் மலைப்பாங்கான பகுதியில் மண்பகுதிஇ களிமண்இ சேற்றுப்பகுதி தனது நிலையில் இருந்து இயற்கையாகவோஇ மனித செயற்பாடுகள் காரணமாக திடீரென மெதுவாக சரிவதனை அல்லது கீழ் இறங்குவதனை நிலச்சரிவு என அழைத்து கொள்வார்கள்.
மண்சரிவினை தோற்றுவிக்கும் காரணிகள்

1)கடும் மழை
மழையானது தொடர்ச்சியாக பொழியும்போது நிலச்சரிவு ஏற்படுத்தும் அபாயம் எழுகின்றது. அதாவது உயரமான பகுதிகளில் மழை பொழியும்போது மழைநீரானது உட்ப்புகுந்து மண் படைகளினை இலேசானதாக செல்வதன் மூலம் மண்ணின் பிடிமானம் குறைவடைகின்றது. இதன் காரணமாக மண் படையமைப்பு தனது இருப்பை விட்டு இடம் பெயரும் போது நிலச்சரிவு ஏற்படும்.
2)தரைத்தோற்ற அமைப்பு
நிலச்சரிவுகள் பெரும்பாலானவை சாய்வுகளை கொண்ட உயர்நிலை பிரதேசங்களில் ஏற்படுகின்றன. சாய்வுகளில் குத்து சாய்வுகளில் மிக விரைவாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடையான பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் வாய்ப்பு குறைவாக காணப்படும்.
3)பாறைகளின் தன்மை
குறிப்பாக பாறைகளில் வன்பாறை, மென்பாறை ஆகியன காணப்படுகின்றது. மழை பொழிகின்ற காரணத்தினால் வன்பாறைகள் உடைவுக்கு உட் பட அதிக காலம் தேவைப்படும். ஆனால் மென்பாறைகள் அதிகளவிலான மழைநீரினை உள்ளெடுக்கும் போது அவை சிதைவுண்டு குறுகிய காலத்தில் நிலச்சரிவினை தோற்றுவிக்கின்றன.
4)நிலநடுக்கம்
தகடுகளின் அசைவுகளினால் தோற்றுவிக்கப்படும் நிலநடுக்கம் காரணமாக உயர்பிரதேசங்கள் மற்றும் பாறைகளில் காணப்படும் பருப்பொருட்கள் அசையும் பொருட்டு நிலச்சரிவு தோன்றுகின்றது.
5)தொடர்ச்சியான பணியுருகல் செயற்பாடு
உயர் மலை பகுதி பிரதேசங்களில் இடம்பெறும் பனியுருகல் செயற்பாடு காரணமாக பௌதீக ரீதியான மாற்றத்தினை ஏற்படுத்தி பாறைகளை சிதைவுக்கு உள்ளாக்கி அப்பாறைகளினை இடம்பெயர செய்யும்போது நிலச்சரிவு தோன்றும்
6)மண்ணரிப்பு
உயர்பகுதிகளிலும் சில இடங்களிலும் இடம்பெறும் தின்னல் செயற்பாடு மற்றும் மனித நடவடிக்கை காரணமாக மண்ணரிப்பு ஏற்படுகின்றது. இதனால் நிலச்சரிவு அனர்த்தம் ஏற்படுகின்றது.
7)முறையற்ற நிலப்பயன்பாடு
மனிதன் தனது பல்வேறு தேவைகளினை நிவர்த்தி செய்யும் பொருட்டு நிலத்தினை பயன்படுத்துகின்றான். குறிப்பாக விவசாய நடவடிக்கைகள், குடியிருப்புகளை அமைத்தல் போன்றவற்றினால் நிலத்தினை மாற்றி அமைகின்றான்.இதன் காரணமாக இயற்கை தன்மையினை மாற்றும்போது மண்சரிவு தூண்டுவிக்கப்படுகின்றது.
8)மலைகளினை தகர்த்தல்
இன்று உலகில் அபிவிருத்தி, நகராக்கம் போன்ற செயற்பாடுகளினால் கட்டிடங்களினை கட்டவும் கற்களினை பெறவும் நிலத்தினை சமப்படுத்தவும் மலைகள் உடைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பாறைகள், பருப்பொருட்கள் அசைவுக்கு உட்பட்டு நிலச்சரிவு ஏற்படுகின்றது.
9)அகழ்வு கைத்தொழில்
இலங்கையின் இரத்தினக்கல் அகழ்வு இடம்பெறுகின்றது. இவற்றினை பெறும் பொருட்டு நிலம் ஆழமாக தோண்டப்படுகின்றது. இதன் காரணமாக மண்ணின் படையமைப்பு குலைக்கப்படுவதுடன் அயற்பகுதியம் சேந்து நிலச்சரிவுக்கு உள்ளாகின்றது.
10)பயிர்ச்செய்கை நடவடிக்கை
முறையற்ற பயிர்ச்செய்கை நடவடிக்கைகளாலும் நிலச்சரிவு அனர்த்தம் ஏற்படுகின்றது. அதாவது உயர்பிரதேசங்களிலும் சாய்வான பகுதிகளிலும் நடைபெறும் பயிர்ச்செய்கை திட்டமிடப்படாதவாறு நடைபெறுவதன் மூலம் மண்திணிவுகள் அசைவுக்கு உட்படுகின்றன.
11)குத்து சாய்வான பகுதிகளில் கடடங்களினை அமைத்தல்
சனத்தொகை அதிகரிப்பின் காரணமாக இன்று அநேகமான இடங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு உயர்மலை பிரதேசங்களிலும், சாய்வான பகுதிகளிலும் மனித தேவைக்கு கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக முறையற்ற நிர்மாணியின் போது நிலச்சரிவு ஏற்படுகின்றது.

இலங்கையில் நிலச்சரிவு அணர்த்தங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்
நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக இலங்கையில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றை நாம் சூழல் ரீதயிலான பாதிப்பு, பொருளாதார ரீதியிலான பாதிப்பு, சமூக ரீதியிலான பாதிப்பு போன்ற பலவாறாக நோக்க முடியும். எனவே மேற்கூறப்பட்டதனடிப்படையில் பின்வருமாறு விரிவாக ஆராய்வோம்.
- நீரின் தரம் பாதிப்படைதல்
இலங்கையில் நீர் நிலைகள், மற்றும் ஆறுகளில் ஏற்படும் நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக பருப்பொருட்கள், அடையல்கள், மற்றும் கனிப்பொருட்கள் என்பன நீருடன் கலப்பதன் காரணமாக அந்நீரின் தரம் பாதிப்படைகின்றது. இதன் காரணமாக அந்நீரினை பாவனைக்கு உட்படுத்த முடியாமற் போகின்றது. - புவியின் வெளியுருவவியற் தன்மை மற்றும் மேற்பரப்பு தன்மை மாற்றமடைதல்
நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக பாறைகள் உடைதல், கீழிறங்குதல், மண் திணிவுகள் அசைவுக்குட்படல் போன்ற செயற்பாடுகள் காரணமாக இயற்கையாக அமைந்த புவிமேற்பரப்பு தன்மை மாற்றியமைக்கப்படுகின்றது. - மனித உயிர்கள் பலியாதல்
இலங்கையில் மக்கள் குடியிருப்புக்களில் ஏற்படும் நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக பாறைகள் விழுதல், கட்டிட உடைவுகள் காரணமாக உயிர்ச்சேதங்களும் ஏற்படுகின்றன. - சொத்துக்கள் சேதம்
நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக மனித சொத்துக்களும் சேதமடைகின்றது. உதாரணமாக கட்டிடங்கள், வீடுகள், பாவனைப் பொருட்கள் வீதிகள், பொது கட்டிடங்கள் போன்றவையும் சேதமடைகின்றமை குறிப்பிடத்தக்கது. - பெருந்தோட்டத்துறை மற்றும் பயிர் நிலங்கள் பாதிப்படைதல்
அதிகமாக இலங்கையில் பெருந்தோட்டப்பயிர்செய்கை பண்ணப்படும் மாவட்டங்களிலேயே நிலச்சரிவு அணர்த்தங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அது பெருந்தோட்டத்துறையில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. பயிர்ச்செய்கை செய்யப்படும் பிரதேசங்களில் நிலச்சரிவு அணர்த்தம் ஏற்படும் போது பயிர்செய்கை நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், பயிர்செய்கை நடவடிக்கைகள் தடைப்படுகின்றது. மேலும் செய்கை பண்ணப்பட்ட பயிர்களும் கூட அழிவினை எதிர்நோக்குகின்றது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும், பொருளாதாரத்திலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. - போக்குவரத்து சீர்கேடு அல்லது போக்குவரத்து தடைப்படுதல்
இலங்கையில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வீதியோரங்களில் அதிகமான நிலச்சரிவு அணர்த்தம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக போக்குவரத்து தடைப்படுகின்றது. - நீர் செல்லும் வழிகள் தடைப்படுதல்
நதி நீரோட்டங்கள் மற்றும் ஆறுகள் பாயும் இடங்களில் ஏற்படும் நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக அங்கு நீரோட்டமானது தடைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி நீரோட்டங்களின் பாதையும் திசை திருப்பப்படுவதனையும் அவதானிக்க முடியும்.
மண்சரிவுகளால் ஏற்படும் சமூக எதிர்விளைவுகள்
மண்சரிவுகள் இயற்கை பேரழிவுகளாக இருந்தாலும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறிப்பாக சமூகத்தின்மீது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவை உடனடி மற்றும் நீடித்த விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
- மக்கள் உயிரிழப்பு
மண்சரிவு காரணமாக மனித உயிர்கள்காவு கொல்லப்படுவதுடன் மற்றும் பலர் பலத்த காயங்களுடன் வாழ்வை தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். - வீடிழப்பு மற்றும் இடம்பெயர்வு
வீடுகள் இடிந்து விழுவதால் மக்கள் தங்கும் இடங்களை இழக்கின்றனர்.இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக முகாம்களில் வாழ்வதற்கும், அடிப்படை வசதிகளின்றி போராடுவதற்கும் நேரிடுகிறது. - வாழ்வாதாரம் இழப்பு
விவசாய நிலங்கள், பயிர்கள் மற்றும் கூலி வேலைகள் போன்ற முக்கிய வாழ்வாதார மூலங்கள் பாதிக்கப்படுகின்றன.இதன் காரணமாக குடும்பங்களின் வருமானம் திடீரென முடங்குகிறது. - கல்வி தடைகள்
இடம்பெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகள் கல்வியை தொடர முடியாமல் விடுபடுகின்றனர். - மனநிலை பாதிப்புகள்
இயற்கை பேரழிவால் பாதிக்கப்படும் மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.பயம், பதட்டம், கவலை, நீடித்த மன அழுத்தம் போன்றவை அதிகரிக்கின்றன.
மக்கள் இடம்பெயர்வதால் பழக்கப்பட்ட சமூக கட்டமைப்புகள் (குடும்பங்கள், நண்பர்கள், சமூகம்) உடைந்துவிடுகின்றன.
இலங்கையில் மண்சரிவுகள் ஒரு இயற்கை அனர்த்தமாகவே காணப்படும் போதிலும், மனித செயல்கள் அதனை அதிகரிக்கக் கூடிய காரணிகளாக இருக்கின்றன. ஆகவே, இந்தக் காரணங்களை புரிந்து கொண்டு, முறையான திட்டமிடலுடன் செயற்பட்டாலே, சமூக பாதிப்புகளை குறைக்க முடியும்.