காத்தான்குடி தோணா வாய்க்கால் மாசடைந்ததால் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல்

By, Fathima Samila

காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள தோணா வாய்க்கால், மாசடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது சுற்றுப்புற மக்களின் ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கைத் தரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இப்பிரதேசம் இயற்கையாகவே மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமலேயே கடலுக்கு நீர் வடிந்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, தோணா வாய்க்கால் என்பது விவசாய நடவடிக்கைகளுக்குத் துணை புரிந்து, மழையில்லா காலங்களில் தேங்கி நிற்கும் நீர் மூலம் பண்ணையப் பணிகளுக்குப் பயன்படக்கூடிய முக்கிய நீர்நிலைப் பகுதியாகக் கருதப்படுகிறது.

ஆனால், தற்போது அந்த வாய்க்காலில் அருகிலுள்ள வீடுகளிலிருந்து கழிவுநீரைக் குழாய்கள் மூலம் நேரடியாக கழித்துவிடும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், குறித்த நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் தினசரி சிரமங்களுக்கு உட்பட்டுள்ளதோடு, சுகாதார அபாயங்களும் எழுந்துள்ளன.

பொதுமக்கள், இது தொடர்பாக நகர சபையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தோணா வாய்க்காலை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், வீட்டுக் கழிவுநீர் மேலாண்மைக்காக மாற்று வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் அளிக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்

Share this message on your Social Network